எந்திரன் படத்தில் நடிக்கவிருந்த இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்.. ஆனால்

எந்திரன்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன். இப்படத்தில் வசி மற்றும் சிட்டி என இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். 2010ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 290 – 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
கமல்
இப்படத்தில் ரஜினிக்கு முன்பே கமல் ஹாசன் நடிக்கவிருந்தார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி சிண்டா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் எந்திரன் படத்திற்காக போட்டோஷூட் கொடுத்து எடுத்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன்பின்தான் இப்படத்தில் ரஜினிகாந்த் கமிட்டானார்.
ரஜினிக்கு முன்பே கமல் ஹாசன் எந்திரன் படத்தில் நடிக்கவிருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், வேறொரு நடிகரும் எந்திரன் படத்தில் நடிப்பதாக இருந்து, பின் விலகியுள்ளார்.
ஷாருக்கான்
அவர் வேறு யாருமில்லை, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ஷாருக்கான்தான். சிவாஜி படத்திற்கு பின் எந்திரன் படத்தில் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து எடுக்க ஷங்கர் முயற்சி செய்துள்ளார். ஷாருக்கான் ஓகே சொல்லியுள்ளார்; ஆனால், அதன்பின் சில விஷயங்கள் ஒத்துப்போகாத காரணத்தினால், நாம் இருவரும் வருங்காலத்தில் வேறொரு படம் பண்ணலாம் என சொல்லிவிட்டு இயக்குநர் ஷங்கர் விலகிவிட்டார்.
இதனால் ஷாருக்கான் – ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருந்த எந்திரன் படமும் டேக் ஆஃப் ஆகவில்லை. இந்த தகவல் இயக்குநர் ஷங்கர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.






