உன்னை பிடிக்கும், உன் நடிப்பை பிடிக்காது என பாரதிராஜா சொல்வார்: ரஜினி உருக்கம்

உன்னை பிடிக்கும், உன் நடிப்பை பிடிக்காது என பாரதிராஜா சொல்வார்: ரஜினி உருக்கம்


இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் அவரை பற்றி உருக்கமாக பேசினார்.

பாரதிராஜா 50 ஆண்டு கால நண்பர். அவரது திறமை, சாதனையை பற்றி எல்லாருக்குமே தெரியும். சினிமா துறையில் பல இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.


அவரை வாழ வைத்த திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா. அது மட்டும் அல்ல. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என யாருக்கு என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராடியவர் பாரதிராஜா.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் படைப்புகளை மறக்க மாட்டார்கள். என்றும் தமிழ் மக்கள் இதயங்களில் இருக்கும்.

உன் நடிப்பை பிடிக்காது என சொல்வார்: பாரதிராஜா பற்றி நடிகர் ரஜினி உருக்கம் | Rajinikanth Emotional About Bharathiraja Death


உன் நடிப்பை எனக்கு பிடிக்காது..

தனிப்பட்ட வகையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. உள்ள என்ன இருக்கோ அதை வெளிப்படையாக சொல்லிவிடுவார். என்னையும் அதிகம் விமர்சிச்சி இருக்கார். உன்னை எனக்கு பிடிக்கும், ஆனால் உன் நடிப்பை எனக்கு பிடிக்காது என சொல்வார்.

அவருடன் இருந்தாலே அவ்ளோ சந்தோசமாக இருக்கும். எம்ஜிஆர், கலைஞர், சிவாஜி என பலருடன் மிக நட்புடன் அன்புடன் இருந்தவர்.


அவரை நேரில் பார்க்க வரலாம் என கேட்டால், இன்னும் கொஞ்சம் சரியாகி விடுவார், அப்போ வாங்க என சொல்லிட்டே இருந்தாங்க. அவரை கடைசி நேரத்தில் பார்க்கமுடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் என் நினைவிலும் என் கூடவே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு ரஜினி பேசி இருக்கிறார்.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *