இனி எதுக்கு வாழணும்னு Mindset-க்கு போயிட்டார் பாரதிராஜா… பிரபலம் ஓபன் டாக்

பாரதிராஜா
என் இனிய தமிழ் மக்களே என இனி சொல்ல அந்த ஒரு நபர் இப்போது நம்முடன் இல்லை. தமிழ் சினிமாவில் மக்கள் வியந்து பார்க்கும் பல படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள் நேற்று (ஜுன் 11) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்பு செய்தி கேட்டதும் பிரபலங்கள் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். இன்று அவரது சொந்த ஊரான தேனியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜா அவரது மகன் மனோஜ் இறப்பிற்கு பிறகு மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாகவும் அவருக்குள் நிறைய வருத்தம் இருந்ததாகவும் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பாலாஜி பிரபு பாரதிராஜா குறித்து நிறைய விஷயங்கள் பேசியுள்ளார்.






