தியேட்டரில் வசூலை குவித்து வரும் “சர்வம் மாயா”.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

தியேட்டரில் வசூலை குவித்து வரும் “சர்வம் மாயா”.. ஓடிடியில் வெளியாவது எப்போது?


மலையாள நடிகர் நிவின் பாலி கடந்த சில வருடங்களாக பல தோல்விகளைச் சந்தித்தார். இருப்பினும், நிவின் பாலி இப்போது அகில் சத்யன் இயக்கிய ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பயர்பிளை பிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் ஆகிய பதாகைகளின் கீழ் அஜய குமார் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான ‘சர்வம் மாயா’ படம் மோகன்லாலின் ‘விருஷபா’ படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதியது. இதில், நிவின் பாலி படம் ஆரம்பத்திலிருந்தே பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி இதுவ ரூ.125 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஓடிடி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மமாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *