Michael திரை விமர்சனம்

ஹாலிவுட் திரையுலகின் கிங் ஆப் பாப் என்று அழைக்கப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். சோசியல் மீடியா இல்லாத காலத்திலேயே உலகம் முழுவதும் மிகப்பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை படமாக Antoine Fuqua இயக்க மைக்கேல் ஜாக்சனாக ஜாபர் ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த இந்த மைக்கேல் படம் எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
மைக்கேல் நாம் இதுவரை முக்கியமாக 90 கிட்ஸுகள் பலரும் கொண்டாடி தீர்த்த மனிதனின் கதை.
மைக்கேல் ஜாக்சன் என்ற கருப்பின சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் எப்படி இந்த உலகையே தன் பாப் இசையால் கட்டி போட்டான் என்பதே இயக்குனர் Antoine Fuqua படமாக எடுத்துள்ளார்.
படம் மைக்கேலின் குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது, மைக்கேல் எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இந்த உயரத்தை அடைந்தார் என்பதே இந்த மைக்கேல் படத்தின் கதை.
இதை கதையாக சொல்வதை விட மைக்கேல் ஜாக்சன் என்ற ஜாம்பவானின் ஒரு பயணமாக பார்ப்பதே ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
படத்தை பற்றிய அலசல்
முதல் பாராட்டு மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்த ஜாபர் ஜாக்சன் தான், இவர் மைக்கேல் ஜாக்சனின் சொந்தக்காரர் என்பதால் அவருடைய உருவம் மேட்ச் ஆகும் என்பதற்காக தேர்வு செய்தார்கள், ஆனால், மைக்கேலின் ஒவ்வொரு அசைவு, நடனம், நடை, உடை, பாவனை என ஜாபர் அவுட் ஆப் தி பாக்ஸ் பெர்ப்பாமன்ஸ் தான் கொடுத்துள்ளார்.
அதிலும் மைக்கேலின் சிறுவயது கதாபாத்திரத்தில் ஒரு பையன் வருகிறான், அவனும் 100% உழைப்பை கொடுத்துள்ளான், இந்த மாதிரியான பெர்ப்பாமன்ஸ் எப்படி ஒரு சிறுவனிடமிருந்து இவ்வளவு தத்ரூபமான நடிப்பை வாங்க முடிகின்றது என்ற வியப்பை ரசிக்ரகளுக்கு அளிக்கிறது.
இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை காட்டியுள்ளனர். குறிப்பாக அவருக்கு இசை மீது எப்படி நாட்டம் வருகின்றது. அந்த இசையை அவர் எப்படி உருவாக்குகின்றார், குறிப்பாக ஒரு காட்சியில் வரிகளை உருவாக்கி, அதை அப்படியே வாய் அசைத்து மெட்டை உருவாக்குவது போன்ற விஷயங்கள் எல்லாம் சூப்பர்.
அதே நேரத்தில் இந்த படம் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கு விருந்து என்றாலும், ஒரு சாமனிய பார்வையாளருக்கு, புதிதாக மைக்கேல் ஜாக்சனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று படத்திற்கு வருபவர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றத்தையே அளிக்கும்.
ஏனெனில் மைக்கேல் ஜாசன் என்ற ஜாம்பவான் குறித்து படம் எடுக்கையில், அதை ஒரு 3 மணி நேர படமாகவாது எடுத்திருக்கலாம், 2.15 நிமிடம் ஓடிக்கூடிய ஒரு பையோகிராபி படம் என்பது ஏமாற்றம் தான், இல்லையென்றால் இப்படித்தான் எடுக்கபோகிறோம் என்றால் இதை நீங்கள் வெப் சீரியஸாகவே எடுத்திருக்கலாமே என்று தான் கேட்க தோன்றுகின்றது.
ஒரு முழுப்படமாக பார்த்திருந்தால் இந்த படம் எல்லோருக்கும் நல்ல இன்ஸ்பிரிஷனாகவும், ஒரு கொண்டாட்டமாகவும் இருந்திருக்கும், அதை தவறவிட்டுள்ளனர், இப்படி குறைகள் இருந்தாலும், கடைசி படம் முடியும் நேரத்தில் எல்லாம் மைக்கேல் ஜாக்சன் ஹிட் பாடல்கள் வர, தியேட்டரே கான்செர்ட் மோட் சென்றதையும் மறுக்க முடியாது.
டெக்னிக்கலாக படம் மிக வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு அப்படியே நாம் சில டிகேட்ஸ் கடந்த அனுபவத்தை தருகிறது, இதை விட இந்த படத்தில் இசை மற்றும் சவுண்ட் இது தான் படத்தின் உயிர்நாடி.
க்ளாப்ஸ்
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்கள், குறிப்பாக ஜாபர் ஜாக்சன்.
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
பையோகிராபியாக ஒரு முழுப்படத்தை பார்த்த அனுபவத்தை தரவில்லை.






