He Man And The Master Of The Universe திரை விமர்சனம்

He Man And The Master Of The Universe திரை விமர்சனம்


He Man And The Master Of The Universe

நாம் சிறு வயதில் பல வெளிநாட்டு காமிக்ஸ் படித்திருப்போம், அதில் சூப்பர் மேனுக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் ஹீ மேன், அதை இந்த ஜெனரேஷன் ரசிகர்களுகாக இன்றைய டெக்னாலஜி-ல் ட்ராவிஸ் நைட் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த ஹீ மேன் படம்? எப்படி பார்ப்போம்.

He Man And The Master Of The Universe திரை விமர்சனம் | He Man And The Masters Of The Universe Review 


கதைக்களம்



இண்டர்னியா கிரகத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்கள் ஒரு கத்தியை பாரம்பரியமாக காத்து வருகின்றனர். ஏனெனில் அந்த கத்தி காலத்திற்கு ஏற்ற வீரனிடம் சென்று அவன் அந்த உலகயே காப்பான் என்பது நியதி.


இந்த தருணத்தில் ஸ்கெல்டான் அந்த கத்தியை அடைந்து உலகை தன் கண்ட்ரோலில் கொண்டு வர வேண்டும் என இண்டர்னியாவை தாக்க, அப்போது ராஜா தன் மகன் மற்றும் கத்தியை வேறு இடத்திற்கு போக சொல்ல, மகன் எப்படியோ பூமிக்கு வருகிறான்.


அங்கு வரும் போது ராஜாவின் மகன் ஆடம் அந்த கத்தியை தொலைக்க, 10 வருடங்களுக்கு மேலாக கத்தியை தேடி, சாமனிய மக்களுடன் இணைந்து வாழ தொடங்குகிறார்.


ஆனால், ஒரு வழியாக அந்த கத்தி கிடைக்க, அவரை தேடி ஸ்கெல்டான் ஒரு மிருகத்தை அனுப்ப, அங்கிருந்து தளபதி மகள் டீலா உதவியுடன் மீண்டும் இண்டர்னியா வந்து தன் ராஜாங்கத்தை ஆடம் கைப்பற்றினாரா என்பதே மீதிக்கதை.

He Man And The Master Of The Universe திரை விமர்சனம் | He Man And The Masters Of The Universe Review




படத்தை பற்றிய அலசல்



ஆடம் ஆக நடித்தவர் ஹீ மேன் கதாபாத்திரம், அப்படியே பொருந்தி போகிறார், அவர் ஹீமேன் ஆக மாறும் போது, 6 பேக் உடற்கடுடன் செம கம்பீரமாக உள்ளார், அப்பாவியாகவும் சரி வீரனாக மாறும் போதும் சரி சின்ன எக்ஸ்பிரேஷன் மாற்றதுடன் கலக்கியுள்ளார்.


இதை தாண்டி மனதில் நிறபது நாயகி டீலா-வின் அப்பா, இண்டர்னியா மக்களின் தளபதியாக வருகிறார், அவரும் காமெடி, வீரம் என இரண்டும் ஸ்கோர் செய்துள்ளார், கூடுதல் சிறப்பாக இவருக்கு டப்பிங் கொடுத்தது நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தான் போல.

படத்தில் பூமிக்கு வரும் மனித மிருகம், ஆடம் ஹீ மேன் ஆக மாறி தப்பிக்கும் இடத்தில் வரும் சேஸிங் சீன் என சில காட்சிகள் நம்மை கவர வைக்கிறது.

He Man And The Master Of The Universe திரை விமர்சனம் | He Man And The Masters Of The Universe Review


இதை தாண்டி பெரும்பாலான காட்சிகள் ஏதோ ஹை பட்ஜெட் டெலிவிஷன் சீரிஸ் பார்ப்பது போலவே உள்ளது, அதோடு நிறைய காமெடி எமோஷ்னல் சீன்களையும் சேர்த்து டேமேஜ் செய்கிறது.


அதிலும் குறிப்பாக பூமியில் கத்தியை எடுக்க செல்லும் கடையில் நடக்கும் காட்சி எல்லாம் என்ன ஹாலிவுட்டில் கூட இப்படியெல்லாம் மோசமாக எடுப்பார்களா என்பது போல் இருந்தது.


பூமிக்கு வந்த கத்தியை தேடும் போதும், அது கிடைக்கும் போதும் எத்தனை உற்சாகம் பரபரப்பு இருக்க வேண்டும், அப்படி எதுவுமே இதில் இல்லை, மேலும் வில்லன் கதாபாத்திரம் கையில் சூனிய குச்சி வைத்து 2,3 பேரை எரிக்கிறார், அதை தாண்டி புத்தியாக எதுவுமே செய்வது இல்லை.


படம் முழுக்க முழுக்க குழந்தைகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட நிலையில், படம் அட்லீஸ்ட் 18 வயதிற்கு உட்பட்டவர் பார்ப்பது போலாவாது இருக்க வேண்டாமா, 5 வயது குழந்தை பார்க்கும் போகோ சேனல் படம் போல் பல காட்சிகள் வருகிறது.


டெக்னிக்கலாக பின்னணி இசை பிரமாதம், ஒளிப்பதிவு முன்பே சொன்னது போல் ஹை பட்ஜெட் டெலிவிஷன் சீரிஸ் லெவலில் உள்ளது, சினிமா தன்மை இல்லாமல் இருக்கிறது.

He Man And The Master Of The Universe திரை விமர்சனம் | He Man And The Masters Of The Universe Review


க்ளாப்ஸ்



ஹீ மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர், மற்றும் தளபதியாக வருபவர்.

பின்னணி இசை

ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகள்


பல்ப்ஸ்



சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை


மொத்தத்தில் இந்த ஹீ மேன், எந்த ஒரு அதிசியத்தையும் நிகழ்த்தவில்லை

2.25/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *