இது நல்லா இருக்கே.. தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து இணையும் பட டைட்டில்
தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.
அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது.
இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வருகிறது.
டைட்டில்
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அந்த படத்திற்கு “படையல்” என டைட்டில் வைத்திருப்பதாக ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட, அந்த டைட்டில் நன்றாக இருக்கிறதே என இயக்குனர் ரிப்ளை செய்திருக்கிறார்.
“படையல் நல்லா இருக்கே.. நான் ஏன் யோசிக்காமல் போனேன்.. சரி ஓகே பேசாம ‘எ தமிழரசன் பச்சமுத்து படையல்’-ன்னு போட்டு விடுறேன். நன்றி” என அந்த நபருக்கு தமிழரசன் பச்சமுத்து பதில் அளித்து இருக்கிறார். அவரது பதிவு இதோ.
