விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

விஸ்வநாத் & சன்ஸ்
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அப்பட வெற்றியின் சந்தோஷத்தில் இருப்பவர் தனது அடுத்தப்பட ரிலீஸிற்கு தயாராகிவிட்டார். சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் தயாராகியுள்ளது, இப்படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 7) வெளியாகி இருந்தது.
இந்த டிரைலரில் சூர்யா சிறுவயதில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுகிறார். பணக்காரரான சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரது குழந்தைக்கு எலும்பு தொடர்பான சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார், அங்கு மமிதா பைஜு குழந்தையின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பது போன்று காட்டப்படுகிறது.
பின்னர் சூர்யாவை காதலிக்கும் மமிதா பைஜு சூர்யாவை காதலிக்க அவரைவிட்டு பிரிய முடியாமல் தவிப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரின் இடம்பெற்றுள்ளன.
ப்ரீ புக்கிங்
லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 லட்சம் கலெக்ஷன் செய்திருப்பதாக கூறப்படுகிறது.






