விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தயாராகும் அப்பத்தா குடும்பம்.. மீனாட்சிக்கு எதிராக நடக்கும் சதி – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி ஜீவா பாக்கெட்டின் தாலியை வைத்து நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மீனாட்சி வீட்டுக்கு வந்த டீச்சரிடம் ஜீவா கிட்ட கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.. கையில எப்பயும் தாலியோடு தான் சுத்துவான். எனக்கும் வேற ஒருத்தரோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது ஜீவா என் கழுத்துல தாலி கட்டிட்டான்.
இந்த மாதிரி ரெண்டு மூணு பொண்ணுக்கு நடந்திருக்கு என்று சொல்ல அந்த டீச்சர் ஜீவா அப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்று சொல்ல வேண்டும் நான் போய் நான் பாக்கெட்டை பாருங்க என்று சொல்ல அந்த டீச்சரும் ஜீவா பாக்கெட்டை பார்க்க பாக்கெட்டுக்குள் தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மீனாட்சி பார்ப்பதை பார்த்த ஜீவா அந்த பெண்ணிடம் வேண்டுமென்றே நெருங்கி பேச அந்தப் பெண் எனக்கு தாலி கட்ட போறீங்களா என பயந்து அங்கிருந்து ஓடி விடுகிறார். பிறகு ஜீவா தன்னுடைய பாக்கெட்டில் தாலி எப்படி வந்தது என யோசிக்க மீனாட்சி அது எப்படி வந்தது? எனக்கு என்ன தெரியும் போய் வேலையை பாருடா என சொல்லிவிட்டு நகர்கிறாள்.
மீனாட்சி மனதுக்குள்ளும் பொசசிவ் இருப்பதை ஜீவா புரிந்து கொள்கிறான். அடுத்ததாக அப்பத்தா எல்லோரையும் கூப்பிட்டு விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்ல தேவி அப்பத்தாவிடம் கோபப்படுகிறாள்.
அப்பத்தான் மீனாட்சி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு பிள்ளையாரை தூக்கி குளத்துல போடு.. ஒழுங்கா எதையும் செய்ய தெரியலன்னு சொல்லி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என கணக்கு போடுகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
