விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலின் கிளைமேக்ஸ் எப்போது தெரியுமா?

சிந்து பைரவி
விஜய் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்திய தொடர்கள் நிறைய ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்துகொண்டு செல்லும் சகோதரிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சிந்து பைரவி.
கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் திரவியம், அனந்த கிருஷ்ணன், பவித்ரா, ஆர்த்தி சுபாஷ் என பலர் கமிட்டாகி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கிளைமேக்ஸ்
விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று சில தினங்களுக்கு முன்பு தகவல் வந்துவிட்டது.
இந்த நிலையில் சீரியலின் கிளைமேக்ஸ் எப்போது என்ற விவரம் வெளியாகியுள்ளது. சிந்து பைரவி சீரியல் வரும் பிப்ரவரி 14, அதாவது வெள்ளிக்கிழமையுடன் முடிகிறதாம்.






