விஜய் சேதுபதி பேச்சால் வெடித்த சர்ச்சை.. விளக்கம் கொடுத்த விஜய் டிவி தரப்பு


பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி.

அரசியல், தலைவர், தலைமைத்துவம் பற்றி பேசிய விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சர் விஜய்யை தான் தாக்கி பேசினார் என சர்ச்சை எழுந்தது. அதனால் விஜய் சேதுபதியை மட்டுமின்றி விஜய் டிவியையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி பேச்சால் வெடித்த சர்ச்சை.. விளக்கம் கொடுத்த விஜய் டிவி தரப்பு | Vijay Sethupathi Controversy Vijay Tv Clarify

விளக்கம்

“பிக் பாஸ் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதற்கான format, theme மற்றும் ஆட்ட சூழல் ஆகியவை இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் வரும் சூழ்நிலைகள், விவாதங்கள், கருத்துக்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் ஷோவின் உள்ளே நடப்பதை மட்டுமே குறிப்பிடுவதாக புரிந்துகொள்ளப்படவேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத்துக்கள் ஷோவுக்கு வெளியில் இருக்கும் எந்த ஒரு நபரையோ, அமைப்பையோ, கருத்தியாலையோ சூழ்நிலையையோ விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள கூடாது.

அவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி வெளியில் நடப்பதை பற்றி விமர்சிப்பதாக எடுத்துக்கொண்டால் அதை நாங்கள் பிரதிநிதிப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ எடுத்துக்கொள்ள கூடாது”.

இவ்வாறு விஜய் டிவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *