லைகா வழக்கு.. அவகாசம் கேட்ட விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடியாக போட்ட உத்தரவு

நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டி உடன் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விஷால் 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அவகாசம் தர முடியாது
10 கோடி ரூபாயை செலுத்த 6 வார கால அவகாசம் தர வேண்டும் என நீதிமன்றத்தில் விஷால் தரப்பு கோரிக்கை வைத்தது.
ஆனால் ஏற்கனவே 8 வார அவகாசம் கொடுத்தாகிவிட்டது என கூறி நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் விஷால் அடுத்து என்ன செய்ய போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






