ஜனனிக்கு எதிராக மாறும் ஈஸ்வரி, குணசேகரனுக்கு வந்த மிரட்டல்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பு குறையாமல் பிரச்சனைகளும் முடியாமல் ரசிகர்களை புலம்ப வைத்த வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஜனனி, ஈஸ்வரி குணமாகி வந்ததும் குணசேகரனை ஜெயிலில் தள்ளிவிடலாம் என மிகவும் நம்பிக்கையாக இருந்தார், ஆனால் அவர் எல்லா விஷயத்தையும் மறந்துவிட கதையே மாறிவிட்டது.
ஈஸ்வரி எல்லாவற்றையும் மறந்திருப்பதை பயன்படுத்தி அவரை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் இழுத்து வருகிறார். கடைசி எபிசோடில், கதிர்-ஞானம் இருவரும் ஜனனி கொஞ்சம் சரியாக இல்லை, அவளை எங்கேயாவது வெளியே இருக்கச் சொல்லுங்கள், அவள் இருந்தால் பிரச்சனை தான் என்கிறார்.
கதிர் பேசியதை கேட்ட ஈஸ்வரி ஜனனி கொஞ்சம் சரியில்லை போல தான் தெரிகிறது என்கிறார், இதைக்கேட்ட நந்தினி-ரேணுகா செம ஷாக் ஆகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி பார்கவி உறவினர்கள் எங்கே உள்ளார்கள், யாரெல்லாம் உள்ளார்கள் என கேட்கிறார். உடனே ஜனனி அப்பா இருந்தார், கொஞ்ச நாள் முன்பு தான் இறந்தார்.
அடிச்சு, பிரச்சனையாக்கி, மருத்துவமனை எல்லாம் சென்று என கூற உடனே ஈஸ்வரி ஷாக் ஆகிறார்.
அடுத்து குணசேகரனுக்கு ஈஸ்வரியை தாக்கிய வீடியோ போனில் வருகிறது, அதைக்கண்டதும் அவர் ஷாக் ஆகி யார் என்று கேட்கிறார்.






