தாய் கிழவி படம் பார்த்த பாரதிராஜா சொன்ன வார்த்தை… எமோஷ்னல் ஆன ராதிகா, வீடியோ இதோ

தாய் கிழவி படம் பார்த்த பாரதிராஜா சொன்ன வார்த்தை… எமோஷ்னல் ஆன ராதிகா, வீடியோ இதோ


தாய் கிழவி

தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டில் வெளியான படங்களில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்த ஒரு திரைப்படம் தாய் கிழவி.

சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எடுத்த இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை வியக்க வைத்து விட்டார் நடிகை ராதிகா.

அவரின் நடிப்பு, படத்தின் கதை என எல்லா விஷயங்களும் மக்களால் பாராட்டப்பட்டது. வசூலிலும் இப்படம் மாஸ் கலெக்ஷன் செய்தது. தாய் கிழவி படத்தில் பவுனு தாய் கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்து பெண்களுக்கு முக்கியமான கருத்தையும் வெளிப்படுத்தினார்.

தாய் கிழவி படம் பார்த்த பாரதிராஜா சொன்ன வார்த்தை... எமோஷ்னல் ஆன ராதிகா, வீடியோ இதோ | Radikaa Gets Blessings From Bharathiraja

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
படத்தை பார்த்த கமல்ஹாசன் தாய் கிழவி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவை கட்டிப் பிடித்து வாழ்த்தியிருந்தார்.

பாரதிராஜா


இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது மகன் மனோஜ் இறப்பிற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிவிட்டார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது வீடு திரும்பிவிட்டார்.

தாய் கிழவி படம் பார்த்த பாரதிராஜா சொன்ன வார்த்தை... எமோஷ்னல் ஆன ராதிகா, வீடியோ இதோ | Radikaa Gets Blessings From Bharathiraja

வீட்டிற்கு வந்தவர் ராதிகாவின் தாய்கிழவி படத்தை பார்த்துள்ளார். பாரதிராஜா வீட்டிற்கு சென்ற ராதிகா, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு தாய்கிழவி படம் பார்த்தீர்களா? நான் நன்றாக நடித்துள்ளேனா? என்று எல்லாம் கேட்கிறார்.

அதற்கு பாரதிராஜா படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறுகிறார். அப்படி மட்டும் விருது கிடைத்தால் அதை வாங்கிக் கொண்டு உங்கள் கால்களில் வைக்கிறேன் என ராதிகா கூறுகிறார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *