தங்கையை காப்பாற்றிய கயல், எழிலின் நிலைமை என்ன தெரியுமா?

கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது கயல் சீரியல்.
முதன்முறையாக ஜோடி சேர்ந்து சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இணைந்து நடிக்கத் தொடங்கிய இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு தான். இப்போது கதையில் ஆனந்தி-கௌசிக் திருமண பரபரப்பு தான் சென்றது.
ஆனந்தி திருமணம் வேண்டாம் என கூற கௌசிக்கோ உன்னை கல்யாணம் செய்தே ஆவேன் என என்னென்னனோ செய்தார். கடைசியில் எப்படியோ அலைந்து கயல் தனது தங்கையை கண்டுபிடித்து காப்பாற்றிவிட்டார்.
பிரச்சனை முடிந்ததா என்றால் இனி தான் அடுத்த பரபரப்பு தொடங்க உள்ளது.
அடுத்து என்ன
அதாவது தன் வாழ்க்கையையே கெடுத்த பாலுவை தான் ஆனந்தி காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எழில் செம கோபமடைகிறார்.
கௌசிக்கிற்கு தான் ஆனந்தியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என எழில் கேட்க கயல் முடியாது என்கிறார். இதனால் கோபப்பட்ட எழில் நீ எனக்கு வேண்டாம் என கயலை தூக்கி எரிந்துவிட்டு செல்கிறார்.
தனியாக அமர்ந்திருந்த எழிலை பாலு நண்பர்கள் சரமாரியாக தாக்குகிறார்கள், இதனால் எழில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். தங்கை பிரச்சனை முடிந்ததும் எழிலை தேடி அவரது அம்மா வீட்டிற்கு கயல் செல்ல அங்கு அவர் இல்லை.
எழில் அடிபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். பூங்காவில் அமர்ந்திருந்த கயலுக்கு எழில் பற்றி தெரிய வருகிறது, அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.






