டிக்கெட் முன்பதிவு: லோகேஷ் கனகராஜின் 'டிசி' திரைப்படத்தின் வசூல் விவரம்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
‘டிசி’
ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த இவர், கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கினார். தனக்கென்று தனித்துவமான மேக்கிங் ஸ்டைலில் படத்தை எடுக்கும் அருண், அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.
ஆனால், அதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஹீரோவாக வைத்து ‘டிசி’ என்கிற திரைப்படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து நடிகைகள் வாமிகா கேபி மற்றும் சஞ்சனா நடித்துள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு
நாளை ‘டிசி’ திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






