டார்ச்சர் செய்யும் மாமியார், விஜயா போட்ட கிரிமினல் பிளான், அண்ணாமலை சும்மா விடுவாரா?… சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்.
அண்ணாமலை விஜயா தம்பதியின் மகன்களின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதையாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இப்போது கதையில் ஒரு கார் டிரைவராக இருந்த முத்து டிராவல்ஸ் ஓனராக தனது பயணத்தை துவங்கியுள்ளார்.
அவரின் வளர்ச்சி கண்டு அண்ணாமலையை தாண்டி விஜயாவும் பெருமைப்படுகிறார். அதனை தொடர்ந்து ரோஹினி மனோஜை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என என்னென்னமோ செய்கிறார், ஆனால் அவர் மனம் மாறவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோடில், விஜயா-பாட்டி காட்சிகள் அதிகம் வருகின்றன. வீட்டில் மீனா மட்டுமே வேலை செய்கிறார் என பாட்டி விஜயாவை வேலை வாங்குகிறார்.
அவர் தனக்கு வேலை கொடுப்பதால் செம கோபம் அடைகிறார் விஜயா. இதனால் அவர் வீட்டில் இருந்தால் தனக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார் அதனால் தனது மாமியாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும் என பார்வதியிடம் கூறுகிறார் விஜயா.
ரோஹினி விஜயா சொன்னதை கேட்டுவிடுகிறார், அடுத்து என்ன நடக்குமோ, இந்த விஷயம் கேட்டு அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
