ஜோசப் விஜய் என்னும் நான்.. நாளை பதவிஏற்பு விழா எத்தனை மணிக்கு பாருங்க! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் களமிறங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் ஜெயித்து இருக்கிறார்.
விஜய்க்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருந்தது. தற்போது ஒருவழியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து இருக்கிறது.
120 எம்எல்ஏ-கள் ஆதரவு கடிதத்துடன் சற்றுமுன் கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நாளை பதவி ஏற்பு
விஜய் கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை பிற்பகல் 3.15 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்க இருக்கிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
“சி.ஜோசப் விஜய் என்னும் நான்..” என விஜய் சொல்லப்போவதை கேட்க தான் தற்போது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றனர்.






