பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் கொண்டாட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்… என்ன விஷயம்

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் பரபரப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக செல்கிறது.
பைனான்சியரிடம் வாங்கிய ரூ. 48 லட்சத்தில் எப்படியோ முத்து-மீனா ரூ. 10 லட்சம் கொடுத்துவிட்டனர்.
மீதம் உள்ள ரூ. 38 லட்சத்தை எப்படி திருப்பி கொடுத்து வீட்டை மீட்பார்கள் என தெரியவில்லை.
வீட்டை ஜப்தி செய்வதை பார்க்க வேண்டாம் என அண்ணாமலை குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள், 3 பேர் மீனா அம்மா வீட்டிலும் 3 பேர் ஸ்ருதி அம்மா வீட்டிலும் உள்ளார்கள்.
மனோஜ் அவரது ஷோரூமிலேயே தங்கியிருக்கிறார், இதுதான் நேரம் என அவரை தனது கைக்குள் போட முயற்சி செய்கிறார் ரோஹினி.
கொண்டாட்டம்
அடுத்து என்ன அடுத்து என்ன என கதைக்களம் பரபரப்பாக செல்ல தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கப்பட்டு இப்போது 1000 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
விஜய் தொலைக்காட்சி சிறகடிக்க ஆசை சீரியல் 1000 எபிசோட் எட்டியதற்கு போஸ்ட் போட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ,






