செந்திலை அவமானப்படுத்தும் பாண்டியன்.. மனமுடைந்து பேசிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கப்போகும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், பழனிக்கு சொத்தில் பங்கு தர முடியாது, அவனுக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை என சக்திவேல் கூற, அந்த சோகத்தில் கோமதியிடம் வந்து அதை பழனி செல்கிறார்.
தனது தம்பிக்கு இப்படியொரு அநீதி நடப்பதை அறிந்தவுடன் உடனடியாக நியாயம் கேட்க சக்திவேல் வீட்டிற்கு கோமதி செல்கிறார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதன்பின், பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பழனிக்கு உறுதுணையாக வந்து நிற்கிறார்கள். ஆனாலும், பழனிக்கு சொத்தில் பங்கு கிடையாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் சக்திவேல்.
வரும் வாரம்
பழனிக்கு சொத்தில் பங்கு தரமாட்டேன் என்கிற பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செந்திலை பாண்டியன் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். இருவருக்கும் இடையே இதனால் கடும் வாக்குவாதம் கூட நடைபெற்றது. அப்போது மேசையை தூக்கி எறிந்துவிட்டு சென்றார் பாண்டியன்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், கடைக்கு வரும் செந்திலை பார்த்து, வேலை வெட்டி எதுவும் இல்லை, அதான் கடை பக்கம் வந்திருக்கான் என பாண்டியன் கூற, செந்தில் உடனடியாக கடையில் இருந்து வெளியே செல்கிறார்.
பின் வீட்டில், அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ‘குழம்பில் கொஞ்சம் காரம் கூடி போய்விட்டது’ என செந்தில் கூற, ‘வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருந்தா இந்த மாதிரி யோசிக்க தோணும். நீ இருக்கிற நிலைமையில் நான் இருந்தேன் என்றால் ஒரு வாய் சோறு கூட தொண்டைக்குள் இறங்காது’ என பாண்டியன் செந்திலை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
இதன்பின், தனது மாமனார் பாண்டியனை கடையில் பார்த்து பேசும் மீனா, “செந்திலை ஏதாவது சொல்வதாக இருந்தால், தனியாக அழைத்து சொல்லுங்கள். எல்லார் முன்னடியும் திட்டுவது தவறுதானே” என தனது கணவருக்காக பேசுகிறார்.






