கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி… உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி… உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்


Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான குடும்பத் தொடர் வாகை சூடவா, அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்றைய எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று உண்மை வெளிச்சத்துக்கு வருமா என்ற பதற்றத்துடன் கதை நகர்கிறது.

பாண்டி கள்ள நோட்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் தவிக்க, இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் மீனாட்சிக்கு ஏற்படுகிறது. குறிப்பாக ஜீவாவின் நடவடிக்கைகள் மீது அவள் கவனமாக இருக்கத் தொடங்குகிறாள்.

கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி... உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Aug 13 2026

மறுபக்கம், இந்த பிரச்சனைக்கு காரணம் பணம் கொடுத்த வாசுதேவன்தான் என்று அப்பத்தா சந்தேகப்படுகிறார். உடனே அவருக்கு போன் செய்து கடுமையாக கேள்வி கேட்க, வாசுதேவன் அதிர்ச்சியடைந்து, “முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்று கேட்கிறார். அதன் பிறகு முழு விஷயத்தையும் தெரிந்துகொண்ட வாசுதேவன், “நீங்க உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க… நான் அங்க வந்து பேசிக்கிறேன்” என்று உறுதியளிக்கிறார்.

இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால், அப்பத்தா வீட்டில் இருப்பவர்களை யாரையும் அழைத்துச் செல்லாமல், மனோவை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். இதனால் மனோவின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. ஏதாவது உண்மை வெளிவந்து விடுமோ என்ற பயம் அவனை உள்ளுக்குள் வாட்டுகிறது.

அதே நேரத்தில், வீட்டிற்கு வரும் ஜீவாவை மீனாட்சி நேரடியாக அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள். ஜீவாவின் மீதான தனது சந்தேகத்திற்கு பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவள் இருக்கிறாள்.

கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி... உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Aug 13 2026

போலீஸ் ஸ்டேஷனில் ஒரு முக்கியமான திட்டத்தை போடுகிறார் அப்பத்தா. மனோவை வேறு ஒரு வேலைக்காக அங்கிருந்து தூரமாக அனுப்பிவிட்டு, வாசுதேவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார். ஒருபக்கம் வாசுதேவன் அவசரமாக அங்கு வந்து கொண்டிருக்க, மறுபக்கம் மீனாட்சியும் ஜீவாவும் போலீஸ் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கப் போகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கள்ள நோட்டு விவகாரத்தின் உண்மை வெளிவருமா? பாண்டி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பாரா? மீனாட்சியின் சந்தேகம் சரிதானா? மனோ எதற்காக இவ்வளவு பயப்படுகிறார்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள, வாகை சூடவா சீரியலை இன்று இரவு Zee தமிழில் தவறாமல் கண்டுகளியுங்கள்!
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *