கர்ப்பமான தேன்மொழி… உண்மை தெரிந்து கொந்தளிக்கும் அப்பத்தா! வீட்டுக்கே மருத்துவச்சியை வரவழைத்த அதிரடி

கர்ப்பமான தேன்மொழி… உண்மை தெரிந்து கொந்தளிக்கும் அப்பத்தா! வீட்டுக்கே மருத்துவச்சியை வரவழைத்த அதிரடி


வாகை சூடவா

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வாகை சூடவா சீரியல் தற்போது எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது.

நேற்றைய எபிசோடில், சாப்பாட்டில் விஷம் கலந்ததாக கூறி ஜீவா ஆதியை கடுமையாக வெறுப்பேற்றி வாந்தி எடுக்க வைத்த நிலையில், இன்று கதை மேலும் சூடுபிடிக்கிறது.

ஆதியை வீட்டிலிருந்து அனுப்பிவைக்கும் ஜீவா, இனிமேல் தனது வீட்டுப் பக்கம் கூட வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறான்.

கர்ப்பமான தேன்மொழி... உண்மை தெரிந்து கொந்தளிக்கும் அப்பத்தா! வீட்டுக்கே மருத்துவச்சியை வரவழைத்த அதிரடி | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Episode

இதனால் ஆதி அதிர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறான்.

மறுபக்கம், திடீரென தேன்மொழி வாந்தி எடுக்கத் தொடங்குகிறாள். இதைப் பார்த்த அப்பத்தாவுக்கு சந்தேகம் எழுகிறது. உடனே மீனாட்சி தேன்மொழியை தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.


இந்த தகவலைக் கேட்ட மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். காரணம், முதலில் தேவி அம்மாவாக வேண்டும் என்பதே அப்பத்தாவின் ஆசை. எனவே இந்த விஷயம் இப்போது வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று நினைத்து, தேன்மொழியின் கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்கிறாள்.


ஆனால் எதிர்பாராத விதமாக இந்த விஷயம் அப்பத்தாவின் காதுகளுக்கு சென்று சேர்கிறது. இதனால் கடும் கோபமடையும் அப்பத்தா, வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறிந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

கர்ப்பமான தேன்மொழி... உண்மை தெரிந்து கொந்தளிக்கும் அப்பத்தா! வீட்டுக்கே மருத்துவச்சியை வரவழைத்த அதிரடி | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Episode

வீட்டில் உள்ள அனைவரும் அவரது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்து நிற்கின்றனர்.

நிலையை சமாளிக்க முயலும் மீனாட்சி, “தேன்மொழி கர்ப்பமாக இல்லை” என்று கூறினாலும், அப்பத்தா அதை நம்ப மறுக்கிறார்.

உண்மையை தெரிந்துகொள்ள மருத்துவச்சியை வீட்டுக்கு வரவழைத்து பரிசோதனை செய்யத் திட்டமிடுகிறார்.

இதைக் கேட்டு பதற்றமடையும் மீனாட்சி, தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து விடுவதாக கூறுகிறாள்.

ஆனால் அப்பத்தா அதற்கும் சம்மதம் தெரிவிக்காமல், வீட்டிலேயே பரிசோதனை நடைபெற வேண்டும் என உறுதியாக நிற்கிறார்.

அதோடு நிற்காமல், ரம்யாவுக்கு அழைப்பு விடுக்கும் அப்பத்தா, தேன்மொழி கர்ப்பமாக இருப்பது குறித்து பேசுவதோடு, ஜீவா, மீனாட்சியை பிரிக்கவும் திட்டம் தீட்டச் சொல்கிறார். இதனால் அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு விதை போடப்படுகிறது.

கர்ப்பமான தேன்மொழி... உண்மை தெரிந்து கொந்தளிக்கும் அப்பத்தா! வீட்டுக்கே மருத்துவச்சியை வரவழைத்த அதிரடி | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Episode



இறுதியாக, அப்பத்தா அழைத்த மருத்துவச்சி வீட்டிற்கு வருகிறார்.

இதனால் தேன்மொழியின் கர்ப்ப ரகசியம் அனைவரின் முன்னும் அம்பலமாகப் போகிறதா என்ற பரபரப்பு உச்சத்தை எட்டுகிறது.

தேன்மொழியின் கர்ப்பம் உறுதியாக தெரிய வருமா? அப்பத்தாவின் கோபம் எந்தளவுக்கு செல்லும்? குடும்பத்தில் அடுத்ததாக என்ன புயல் வீசப்போகிறது? பரபரப்பான திருப்பங்களுடன் வரும் இன்றைய வாகை சூடவா எபிசோடை தவறாமல் காணுங்கள்! 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *