கர்நாடகாவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

கர்நாடகா மாநிலத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
வசூல்
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுதான் அந்த படத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது.
தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது முக்கியமான விஷயமாக இருந்தாலும், மற்ற மாநிலங்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது முக்கியமாக திரையுலகில் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், ஒரு நடிகரின் திரைப்படம் இந்த முறை வேற்று மாநிலத்தில் எவ்வளவு வசூலிக்கிறதோ, அதைத்தான் அவருக்கு அங்குள்ள மார்க்கெட்டாக பார்க்கப்படுகிறது. அதன்பின், வெளியாகும் திரைப்படங்களின் திரையரங்கு உரிமைக்கான மதிப்பும் அதிகரிக்கும்.
கர்நாடகாவில் அதிக வசூல்
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தமிழ் சினிமாவில் இருந்து வெளியான திரைப்படங்கள் செய்த டாப் 10 அதிக வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் – ரூ. 70 கோடி
2.0 – ரூ. 51 கோடி
கூலி – ரூ. 45 கோடி
லியோ – ரூ. 41 கோடி
ஜனநாயகன் – ரூ. 30 கோடி
கோட் – ரூ. 27.95 கோடி
பொன்னியின் செல்வன் 1 – ரூ. 27.2 கோடி
அமரன் – ரூ. 24.5 கோடி
விக்ரம் – ரூ. 24 கோடி
கபாலி – ரூ. 21.1 கோடி
பொன்னியின் செல்வன் 2 – ரூ. 19.5 கோடி






