என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம்
அங்காடித் தெரு, வேலாயுதம், ஜில்லா போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பிளாக் பாண்டி. அவரை பற்றி சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவி இருந்தது.
பிளாக் பாண்டி படவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பண உதவி செய்ய முன்வந்தாராம். அவர் அதை ஒரு பேட்டியில் ‘படதெரிவித்து இருந்தார். ‘பட வாய்ப்பு கேட்டால் சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து அசிங்கப்படுத்தினார்’ என அவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது.
விளக்கம்
அது பற்றி தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கும் பிளாக் பாண்டி, ‘சிவகார்த்திகேயன் எனக்கு நண்பராக இருந்தவர். தற்போதும் இருப்பவர். அவர் கொடுத்து அனுப்பிய பணத்தை நான் வாங்கவில்லை. எனக்கு பட வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என சொல்லி அனுப்பினேன்.’
‘அதை பற்றி பேட்டியில் சொன்னது தவறாக சித்தரித்துவிட்டார்கள். அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது பற்றி நான் நேரில் சென்று விளக்கம் கொடுத்தேன்.’
‘நீ காசு கொடுத்தது பெருந்தன்மையான விஷயம். உன்னிடம் காசு வாங்கி நான் ஏமாற்ற விரும்பவில்லை. என் கை கால் நல்லா தான் இருக்கு. நான் படுத்த படுக்கையாக ஆகிவிட்டால், அந்த நேரத்தில் உதவி செய்தால் பெரிய விஷயம் என கூறினேன்’ .
‘அப்படி பேசி முடிக்கப்பட்ட ஒரு விஷயத்தை தற்போது மீண்டும் மீம் ஆக பரப்பி, சிவகார்த்திகேயன் என்னை அசிங்கபடுத்தியதாக பேசுகிறார்கள். அவர் பெயருக்கு ஏன் களங்கம் விளைவிக்கிரீங்க’ என பிளாக் பாண்டி பேசி இருக்கிறார்.
