என்னது பும்ரா கால்பந்து வீரரா.. மன்னிப்பு கேட்ட நடிகர் ராம் சரண்

நடிகர் ராம்சரண் தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது இந்திய அளவிலும் பிரபலமான நடிகராகி விட்டார். சொல்லப்போனால் ஆர்ஆர்ஆர் படம் அவரை உலக அளவில் பாப்புலர் ஆக்கிவிட்டது என்று கூட சொல்லலாம். தற்போது அவர் பெத்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வரும் ஜூன் 4ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி இருக்கிறது.
அந்த படத்தின் விழா சமீபத்தில் போபாலில் நடந்தது. அப்போது மேடையில் ராம்சரணிடம் கிரிக்கெட் வீரர்கள் பற்றி ராபிட் ஃபயர் ரவுண்ட் கேள்விகள் கேட்கப்பட்டது. சச்சின், விராத் கோலி, எம்எஸ் தோனி என பலரது பெயர்களும் வர அவரும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறி வந்தார். அதனை தொடர்ந்து பும்ரா பற்றி கேட்ட போது தான் அவர் கால்பந்து வீரர் என ராம்சரண் கூறிவிட்டார்.
‘ஜஸ்பிரித் பும்ரா ஜி நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். எனக்கு கால்பந்து பிடிக்கும் நீங்கள் கால்பந்தை இன்னும் மேலும் உயரத்துக்கு கொண்டு செல்கிறீர்கள். லவ் யூ சார்’ என ராம்சரண் பேசியிருந்தார்.
மன்னிப்பு
இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் ராம்சரணை ட்ரோல் செய்தனர். அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருக்கிறார் ராம்சரண்.
‘எனக்கு மறதி மிக அதிகம். அந்த கூட்டத்திற்கு நடுவே செய்த மனித தவறுக்காக பும்ரா ஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன். உங்கள் விளையாட்டுக்கும் நான் பெரிய ரசிகன்’ என ராம்சரண் பதிவிட்டு இருக்கிறார்.
Uff… I’m genuinely so forgetful with names sometimes.
Apologies to @Jaspritbumrah93 Ji for the mix-up – it was a genuine human error in the middle of all the excitement and the crowd 🙏🏼
I truly respect you and I am a huge fan of your game. You make every Indian feel proud when…
— Ram Charan (@AlwaysRamCharan) May 23, 2026






