இந்த வயசில் ட்ராமா.. யாரை சொல்கிறார் த்ரிஷா? வைரலாகும் பதிவு

நடிகை திரிஷா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகள் வைரல் ஆகின்றன. சமீபத்தில் அவர் விஜய்யுடன் வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படம் எந்த அளவுக்கு வைரல் ஆனது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதை தொடர்ந்து அவர் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.
மறுபுறம் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கு வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து த்ரிஷா போடும் பதிவுகள் மேலும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
யாரை சொல்கிறார்?
இன்று த்ரிஷா போட்டு இருக்கும் ஒரு பதிவு அப்படி வைரலாகி இருக்கிறது. “இந்த வயதில் ட்ராமா சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்” என த்ரிஷா பதி பதிவிட்டு இருக்கிறார்.
த்ரிஷா யாரை சொல்கிறார் என்று நெட்டிசன்கள் தற்போது கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.






