அம்பிகாவிடமிருந்து கொலுசை கைப்பற்றிய மகா, காத்திருந்த அதிர்ச்சி – திருமாங்கல்யம் சீரியல் அப்டேட்


திருமாங்கல்யம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம்.

நேற்றைய எபிசோடில் அம்பிகாவும் மகாவும் கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களை காத்திருக்கின்றன.

அதன்படி, கோவிலுக்கு வந்த அம்பிகா ஆட்டோவில் இருந்து இறங்கி, ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுக்க பையில் இருந்து பணத்தை எடுக்கிறார்.

அம்பிகாவிடமிருந்து கொலுசை கைப்பற்றிய மகா, காத்திருந்த அதிர்ச்சி - திருமாங்கல்யம் சீரியல் அப்டேட் | Zee Tamizh Thirumangalyam Serial Latest Episode

அப்போது அவரது கொலுசு தவறி கீழே விழுகிறது. இதை கவனித்த மகா, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த கொலுசை எடுத்து யாருக்கும் தெரியாமல் கையில் மறைத்து வைத்துக் கொள்கிறார்.



இதற்கிடையில், கொலுசு காணாமல் போனதை உணர்ந்த அம்பிகா ஆட்டோவும், தன்னுடைய பையும் முழுவதுமாக தேடி பார்க்கிறார். ஆனால் கொலுசு கிடைக்காததால் அதிர்ச்சியடைகிறார். மறுபுறம், மகா கையில் இருந்த கொலுசை கோவில் உண்டியலில் போட்டுவிடுகிறார்.

சாமியார் கொலுசைப் பற்றி கேட்க, அதை எங்கோ தவறவிட்டதாக கூறிய அம்பிகா, பின்னர் அதை தேடிச் செல்வதாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

அதே நேரத்தில் வீட்டில், கவிதா மகாவின் பையை ஆராய்ந்து பார்க்கிறார்.

அம்பிகாவிடமிருந்து கொலுசை கைப்பற்றிய மகா, காத்திருந்த அதிர்ச்சி - திருமாங்கல்யம் சீரியல் அப்டேட் | Zee Tamizh Thirumangalyam Serial Latest Episode

அப்போது கிழிக்கப்பட்ட நிலையில் மகா மட்டுமே இடம்பெற்றிருந்த திருமண புகைப்படங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து பையின் உள்ளே இருந்த ஒரு கொலுசை எடுத்த கவிதா, அதை வெளியே தூக்கி எறிகிறார். அந்த கொலுசு ஹாலில் விழ, அதை கண்ட மயிலு, இது மகாவுடையதாக இருக்கலாம் என நினைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறான்.

பின்னர் அம்பிகாவும் மகாவும் வீட்டிற்கு திரும்புகின்றனர்.

அம்பிகா நேராக தனது அறைக்குச் சென்று காணாமல் போன கொலுசை தேடத் தொடங்குகிறார். அப்போது மயிலு, மகாவிடம் சென்று கையில் இருந்த கொலுசை காட்டி, “இது உன்னுடைய கொலுசா?” என்று கேட்கிறான். இதைப் பார்த்த மகா அதிர்ச்சியடைகிறார்.


ஆனால் அந்த நேரத்தில் அங்கு வந்த அம்பிகாவின் கண்களில் கொலுசு படுகிறது. “இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த கொலுசு!” என்று கூறி மயிலுவிடமிருந்து அதை வாங்கிக் கொள்கிறார்.

இதனால் மகாவின் ஷாக் ஆகிறாள்.

இதையடுத்து வீட்டில் என்னென்ன புதிய பிரச்சனைகள் வெடிக்கப்போகின்றன? மகா யார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வருமா? என்ற பரபரப்பான தருணங்களை காண, திருமாங்கல்யம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் கண்டு ரசிக்கலாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *