முடிவுக்கு வரப்போகும் மகாநதி சீரியல், வேறொரு சீரியலின் நேரம் மாற்றம்… முழு விவரம்

முடிவுக்கு வரப்போகும் மகாநதி சீரியல், வேறொரு சீரியலின் நேரம் மாற்றம்… முழு விவரம்

மகாநதி சீரியல்

சில வருடங்களாக பார்த்து ரசித்த ஒரு தொடர் முடிவுக்கு வருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும்.

அப்படி ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் தொடராக இருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இன்றைய எபிசோடில், விஜய் காவேரியை அவரை முதன்முதலாக சந்தித்த வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு சென்று வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் விஜய் கூற காவேரி ஒரு மாதிரி ஆகிறார். அதாவது அவருக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்புகிறது, அதோடு எபிசோடை முடித்துவிடுகிறார்கள்.

நாளை காவேரி பழைய நினைவுகளுடன் விஜய்யிடம் எமோஷ்னலாக பேசுவார் என தெரிகிறது.

மாற்றம்

இந்த வாரத்துடன் ரசிகர்களின் பேவரெட் மகாநதி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இதனால் விஜய் டிவியில் ஒரு சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிந்து பைரவி சீரியல் வரும் ஜுன் 29ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *