மண்டாடி படத்தில் நடித்த சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா வாங்கிய சம்பளம்
Mandaadi movie cast salary: சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் மண்டாடி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சூரி, சுஹாஸ், சத்யராஜ் மற்றும் நடிகை மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மண்டாடி
வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்த அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மண்டாடி. இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துள்ளார். முதல் தமிழ் படத்திலேயே இவருக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், பிரபல தென்னிந்திய நடிகை மஹிமா நம்பியார் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, புரட்சி தமிழன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் வந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் என்பது உறுதி.
சம்பளம்
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள மண்டாடி திரைப்படத்தில் நடித்துள்ள சூரி, சுஹாஸ், சத்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோரின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
சூரி இப்படத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். வில்லனாக நடித்துள்ள சுஹாஸ் – ரூ. 3 கோடி, சத்யராஜ் – ரூ. 2 கோடி மற்றும் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மஹிமா நம்பியார் – ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர். மேலும், மண்டாடி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
