பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் இவர்கள் தானா? லிஸ்ட் இதோ

வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

10

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி பிக் பாஸ் 10 தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காமென் மேன் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதிலிருந்து முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்

இந்நிலையில், பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

இதில், சீரியல் நடிகைகள் ஜனனி அசோக் குமார், ஹேமா ராஜ்குமார், ஆல்யா மானசா, அக்ஷிதா அசோக் மற்றும் ஷபானா ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

மேலும், சீரியல் நடிகர்கள் நவீன் குமார், வினோத் பாபுவும் இதில் பங்குபெற போகிறார்களாம். இவர்களுடன் குக் வித் கோமாளி பிரபலம் டாலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

அனைத்திற்கும் மேலாக சர்ப்ரைஸ் என்னவென்றால், ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இப்போட்டியில் பங்குபெற போவதாகவும் கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *