நாயகியாக திரைப்படத்தில் நடிக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா… குவியும் வாழ்த்து

நாயகியாக திரைப்படத்தில் நடிக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா… குவியும் வாழ்த்து

நடிகை ரேஷ்மா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக நடன நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

2016ம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் 3வது இடத்தை பிடித்தார். பின் சில நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போது பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நாயகியாக கலக்க துவங்கினார்.

நாயகியாக திரைப்படத்தில் நடிக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா... குவியும் வாழ்த்து | Serial Actress Reshma Committed In Movie

அந்த சீரியல் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அதன்பின் கலர்ஸ் தமிழ் பக்கம் சென்றவர் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்தார்.

பிறகு பிரபல சீரியல் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா, விஜய் டிவியில் கிழக்கு வாசல் தொடரில் நடித்தார், சீரியல் வெகு விரைவில் முடிவுக்கு வந்தது.

தற்போது சன் டிவியில் செல்லமே செல்லமே என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

நாயகியாக திரைப்படத்தில் நடிக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா... குவியும் வாழ்த்து | Serial Actress Reshma Committed In Movie

புதிய படம்


சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேஷ்மாவிற்கு இப்போது பட வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார், அப்பட பூஜை கூட சமீபத்தில் போடப்பட்டுள்ளது. இதோ பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *