DISCO (மலையாளம்): திரை விமர்சனம்

அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத், ஆண்டனி வர்கீஸ், தேவ் மோகன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள டிஸ்கோ மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review

கதைக்களம்




கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது சாண்டாகிளாஸ் வேடமிட்ட சிலர், ஒரு வீட்டிற்குள் போதையில் இருக்கும் இளைஞர்களை கொலை செய்கின்றனர்.


ஹௌசு (தேவ் மோகன்) தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் சரக்குகளை கொள்ளையடித்து வருகிறார்.

அதேபோல் முன்பு கேங் லீடராக இருந்த டார்லிங் மார்ட்டி தனது குடும்பத்தினால் வெறுக்கப்படுகிறார்.


அவருக்கும், அவரது தம்பியின் வகுப்பு தோழிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. மற்றொருபுறம் ஹௌசு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review

சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் ஈடுபடும் ஹௌசு மற்றும் டார்லிங் மார்ட்டி இருவரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாகிறார்கள்.


இந்த சூழலில் ஒரு காலத்தில் கேங்ஸ்டராக இருந்த விடியார்மோ (செம்பன் வினோத்) ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார்.

இன்னொருபுறம் விஷ்ணு சிலரை தேடி ஓரிரு கொலைகளையும் செய்கிறார்.


டார்லிங் மார்ட்டி, ஹௌசு இருவரது கேங்ஸை ஒன்றிணைத்து விடியார்மோ ஒரு கொள்ளையடிக்கும் திட்டத்தை விளக்குகிறார். அதற்காக சாகர் சூர்யா என்ற கொள்ளை கும்பலின் தலைவனை கடத்த வேண்டும்.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review

அந்தக் கடத்தலில் களமிறங்கும் டார்லிங் மார்ட்டி, ஹௌசுவின் கேங்கின் வாழ்க்கையில் என்ன பிரச்சனைகள் வந்தன? விஷ்ணு கொலை செய்வதும் சிலரை தேடுவதும் ஏன் என்பதற்கான விடைதான் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்



செம்பன் வினோத் தயாரித்து எழுதியிருக்கும் இப்படத்தை உல்லாஸ் செம்பன் இரத்தம் தெறிக்கும் ஆக்ஷ்ன் படமாக இயக்கியுள்ளார்.


படத்தில் பிரதானமாக இருப்பது சண்டைக்காட்சிகள்தான்; ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் மிரள வைக்கின்றன.

ஸ்டண்ட் மாஸ்டர் கலை கிங்ஸன் மிரட்டலாக அந்த காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


சர்வதேச அளவில் டான் என்று தெரியாமலேயே உள்ளூர் கேங்ஸ்டர்ஸ் அவரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். பின்னர் அது பழிவாங்கும் படலமாக மாறுகிறது.




ஆனால், அதற்கான காரணம் மிகவும் செயற்கையாக, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது.


மேலும் முதல் பாதி வரும் தேவையில்லாத பில்டப்கள், அதற்கு மாஸ் bgm என்று சோதிக்கும் பின்னணி இசை, சம்பந்தமில்லாத காட்சிகள் என பொறுமையை மிகவும் சோதிக்கிறது.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review




இடைவேளையில்தான் கதையே தொடங்குகிறது. அதற்காக வைக்கப்பட்ட செட்அப் காட்சிகள் எதுவும் சரியான கோர்வையில் வரவில்லை. ஏன் கொலைகள் நடக்கின்றன என்று தெரியாமல் இருந்தால் பரவாயில்லை; ஆனால் கொலை செய்து யார் என்றும், கொலை செய்யப்படுவது யார் என்றுமே தெரியாததுதான் எரிச்சலூட்டுகிறது.



இரண்டாம் பாதியில் காரண காரியங்களை விளக்கினாலும், முதல் பாதியில் காட்சியை சில காட்சிகளை மீண்டும் காட்டுவது படத்தை நீளத்தை கூட்டி, பார்வையாளர்களை மிகவும் கடுப்பாக்குகிறது.


மேலும் கொஞ்சம் கூட லாஜிக் என்பதே இல்லை என்பதும், திணிக்கப்படும் கிளாமர் காட்சிகளும் மிகப்பெரிய உறுத்தல்.

அதை விட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு, வெட்டி வீசக்கூடிய மிக மோசமான வன்முறை காட்சிகள் உள்ளன.


குறிப்பாக ஒரு காட்சியில் தலையை வெட்டியவுடன் உடலில் இரத்தம் கொப்பளிப்பது போல் காட்டியதெல்லாம் குரூரத்தின் உச்சம்.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review




நடிகர்களைப் பொறுத்தவரை செம்பன் வினோத் தனக்கான பில்டப் காட்சிகளை தானே எழுதிக்கொண்டிருக்கிறார் போல. அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் இரைச்சலான பின்னணி இசையில் பில்டப் எல்லாம், எப்ப போதும்பா என கேட்கத் தோன்றுகிறது.




அர்ஜுன் அசோகன் பிரதான கதாபாத்திரத்தை செய்திருப்பார் என்று நினைத்து வந்தவர்களுக்கு எல்லாம் பெரிய ஏமாற்றம். ஒரு சிறிய கதாபாத்திரத்திற்கு எதற்கு அவர் என்று தெரியவில்லை.


லுக்மான் அவரன், ஆண்டனி வர்கீஸ், தேவ் மோகன், பெமினா ஜார்ஜ் ஆகியோர் இந்தக் கதைக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை தந்துள்ளனர்.



மணிகண்டன் ஐயப்பாவின் இசை பல இடங்களில் இரைச்சல். படத்தொகுப்பாளர் ரோஹித் வி.எஸ்.வாரியத் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.


ஆர்மோவின் ஒளிப்பதிவு படத்தை மிகவும் ரிச் ஆக காட்டுகிறது. மேக்கிங்கை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. திரைக்கதைதான் படுசொதப்பல்.

க்ளாப்ஸ்



  • சண்டைக்காட்சிகள்



  • ஒளிப்பதிவு


  • மேக்கிங்




பல்ப்ஸ்



  • திரைக்கதை


  • தேவையில்லாத வெற்று பில்டப்


  • எரிச்சலூட்டும் காட்சிகள்




மொத்தத்தில் இந்த டிஸ்கோ பார்வையாளர்களுக்கு சோதனை.

DISCO (மலையாளம்): திரை விமர்சனம் | Disco Movie Review

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *