அட்ரா சக்க.. நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்த காத்தாடி Club பிரபலங்கள்


Kaathadi Club Instagram stars meet Kamal haasan: இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த காத்தாடி Club பிரபலங்கள் சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசனை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இது AI அல்ல உண்மையான புகைப்படம் என்றும் பதிவிட்டு இருப்பது வைரலாகியுள்ளது.


காத்தாடி Club


ஒரு காலத்தில் நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு திறமைகள் வந்தனர். அதன்பின் Audition வைத்து அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்ந்தெடுத்தனர். பின், சின்னத்திரை, Youtube போன்ற தளங்களில் இருந்தும் நடிகர்கள் வெள்ளித்திரையில் கால்பதித்தனர். ஆனால், இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன. அப்படி ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கொண்டாடப்பட்டு வரும் பக்கம்தான் காத்தாடி Club.

அட்ரா சக்க.. நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்த காத்தாடி Club பிரபலங்கள் | Kaathadi Club Meets Kamal Haasan



வைரலாக மாறிய விஷயங்கள்


இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பல வீடியோக்கள் இன்று மீம் Material-ஆக மாறியுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் போன்ற உச்ச நட்சத்திரங்களே இவர்களை மேடையில் பாராட்டி பேசியுள்ளார். காத்தாடி Club-ல் இருந்து வெளியான வீடியோக்களில், ‘அவன் சூடு தண்ணிலேயே கைய விடுவான், உன்ன சும்மாவா விடுவான்’, ‘என்னடா நீ சும்மா’, ‘அட்ரா சக்க, அந்த மாஸ் ஜோசப்பே நான்தான் தெரிஞ்சா என்ன ஆவானோ’ போன்ற வசனங்கள் தமிழ்நாடு முழுக்க டிரெண்ட் ஆகிவிட்டன.

அட்ரா சக்க.. நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்த காத்தாடி Club பிரபலங்கள் | Kaathadi Club Meets Kamal Haasan



கமல் ஹாசனுடன் சந்திப்பு


உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் கமல் ஹாசன். இவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்து விட மாட்டோமா என பல சினிமா பிரபலங்களுக்கு ஏக்கம் இருக்கும். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள காத்தாடி Club பிரபலங்கள் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர்.

அட்ரா சக்க.. நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்த காத்தாடி Club பிரபலங்கள் | Kaathadi Club Meets Kamal Haasan


அட்ரா சக்க இது AI இல்ல


இந்த புகைப்படத்தை பார்க்கும் சிலர் இது AI என கமெண்ட் செய்ய வாய்ப்புண்டு என்பதை அறிந்து, தங்களது பிரபலமான வசனத்தை கூறி, ‘ அட்ரா சக்க, இது AI இல்ல ஒரிஜினல்-னு தெரிஞ்சா என்ன ஆவனுங்களோ’ என குறிப்பிட்டுள்ளனர். ரசிகர்களின் இவர்களுடைய இந்த வளர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *