நடிகையுடன் நெருக்கமான காட்சிகள்.. எந்த மனைவியும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்!! நடிகர் யாஷ் ஓபன் டாக்

நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.
யாஷ்
கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் யாஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் டாக்சிக்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து டிரைலர் வரை பல சர்ச்சைகளை டாக்சிக் சந்தித்து வருகிறது. நடிகர் – நடிகைக்கு இடையிலான நெருக்கமான காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது. கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ரிஷிகா சிங் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
நெருக்கமான காட்சிகள்
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்கும்போது தனது மனைவி ராதிகா எப்படி எடுத்துக்கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கை துணைக்கும் அந்த உணர்வு இருக்கும். ஆனால், இறுதியில் இவை எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன் மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்றார்.
என் மனைவிக்கு சங்கடமாகத்தான்
மேலும் பேசிய அவர், “மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசௌகரியமாகவே இருக்கும். அந்த காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதல்ல. கதைக்கு அந்த காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது”.
“அப்படியான காட்சிகளில் என்னை பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமாகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதை தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால், இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன வேலையை செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்” என கூறினார்.






