கருமுட்டையை அதற்காக உறைய வைத்துள்ளேன்… குழந்தை பெறுவது குறித்து கிரித்தி சனோன்

கருமுட்டையை அதற்காக உறைய வைத்துள்ளேன்… குழந்தை பெறுவது குறித்து கிரித்தி சனோன்

கிரித்தி சனோன்

பாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகள் பலர் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

சிலர் Surrogacy மூலம் குழந்தை பெறுகிறார்கள், இன்னும் சில வழிகளையும் பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஏன் தமிழ் சினிமாவில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாரா Surrogacy மூலம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயானார்.

தற்போது ஒரு நடிகை குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

யார் அவர்


பாலிவுட் சினிமாவில் அண்மையில் வெளியாகி செம ஹிட்டான Cocktail 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகை கிரித்தி சனோன்.

இவர் தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அதிரடி முடிவு எடுத்துள்ளார். நடிகை கிரித்தி சனோன் ஒரு பேட்டியில், நான் குழந்தைகளை விரும்புகிறேன், ஆனால் திருமணம் அல்லது குழந்தைப்பேறுக்காக அவசரப்பட விரும்பவில்லை.

கருமுட்டையை அதற்காக உறைய வைத்துள்ளேன்... குழந்தை பெறுவது குறித்து கிரித்தி சனோன் | Actress Kriti Sanon About Having Child In Future

எதிர்காலத்தில் நான் தயாராக இருக்கும் நேரத்தில் தாயாகும் வாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் கருமுட்டையை உறையவைத்தேன்.
இந்த முடிவுக்குப் பிறகு வயது மற்றும் சமூக அழுத்தம் குறித்த கவலை நீங்கி மனநிம்மதி கிடைத்துள்ளது.

கருமுட்டையை அதற்காக உறைய வைத்துள்ளேன்... குழந்தை பெறுவது குறித்து கிரித்தி சனோன் | Actress Kriti Sanon About Having Child In Future

இது பயத்தால் அல்ல, எனது வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தில் குடும்பம் அமைக்க தனிப்பட்ட முடிவாகும். இப்போது எனது கவனம் வாழ்க்கை, சினிமா பயணத்தை ரசிப்பதில்தான் இருக்கிறது.

சரியான நேரம் வரும்போது திருமணம் மற்றும் குழந்தைப்பேறு குறித்து முடிவு எடுப்பேன் என பேட்டி அளித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *