ஒரே திருமண நிகழ்ச்சியில் சமந்தா – நாக சைதன்யா! விவாகரத்துக்கு பின் சந்தித்து கொண்டார்களா?

ஒரே திருமண நிகழ்ச்சியில் சமந்தா – நாக சைதன்யா! விவாகரத்துக்கு பின் சந்தித்து கொண்டார்களா?

காதலித்து திருமணம் செய்துகொண்டு நான்கே வருடங்களில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதற்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமந்தா விவாகரத்துக்கு சோபிதாதான் காரணம் என அப்போதிருந்தே ட்ரோல்கள் அதிகம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

 அதனை தொடர்ந்து சமந்தா கடந்த வருடம் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரே திருமண நிகழ்ச்சியில் சமந்தா - நாக சைதன்யா! விவாகரத்துக்கு பின் சந்தித்து கொண்டார்களா? | Samantha And Ex Naga Chaitanya Attend Same Wedding

ஒரே திருமண நிகழ்ச்சியில்..

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடந்த பிரபல தயாரிப்பாளர் சுனில் நரங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா தங்களது ஜோடிகளுடன் தனித்தனியாக கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உட்பட தெலுங்கு சினிமாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


விவாகரத்துக்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பது வைரலாக பேசப்படும் விஷயமாகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *