இரண்டாவது நாள் பல மடங்கு அதிகமான பத்தா படத்தின் வசூல்
பத்தா படம்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , லிஜுமோ ஜோஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பத்தா.
இப்படம் ரிலிஸ் ஆனது பலருக்கும் தெரியவில்லை, அதிலும் முதல் நாள் பல ஊர்களில் இப்படத்திற்கு தியேட்டரும் கிடைக்கவில்லை, அதனால் முதல் நாள் தமிழகத்தில் ரூ 1.5 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 2 கோடி வசூல் செய்து இருந்தது.
ஆனால், இரண்டாம் நாள் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்க உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.
தற்போது இரண்டு நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 6 கோடிகள் வசூல் செய்து படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது,
இன்றும் பலருக்கு விடுமுறை என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
