அதை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துங்க.. பிகினி வீடியோ பற்றி கோபமாக பேசிய ருக்மிணி வசந்த்

நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் கன்னடத்தில் அவர் நடித்த காந்தாரா 2 படம் மிகப்பெரிய ஹிட் ஆகி 800 கோடிக்கும் மேல் வசூலித்தது.
சமீபத்தில் ருக்மிணி வசந்த் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இறங்குவது போல ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலி வீடியோ தான்.
போலீசில் புகார்
இந்த வீடியோ பற்றி தற்போது ருக்மிணி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இது பற்றி பேசியிருக்கிறார் அவர்.
“AI நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள், இப்படி தவறான விதத்தில் அல்ல. நடிகைகள் மட்டுமல்ல, இதுபோல மற்ற பல பெண்களுக்கும் பாதிக்கப்படுகிறார்கள். “
“போலீஸ் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என ருக்மிணி வசந்த் தெரிவித்து இருக்கிறார்.






