அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. பின், விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது..!!

Ajith missed this blockbuster movie: நடிகர் அஜித் நடித்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படம், பின்நாளில் விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது. அதைப்பற்றிதான் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கவிருக்கிறோம்.

அஜித் குமார்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் கடைசியாக நடித்து குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. பின், விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது..!! | Ajith Kumar Missed This Blockbuster Movie

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் அஜித் இணைந்திருக்கும் திரைப்படம் டேர் டெவில். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஸ் செய்த படம்

நடிகர் அஜித் தனது திரை வாழ்க்கையில் பல ஹிட், ஃபிளாப் திரைப்படங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் மிஸ் செய்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா.

அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. பின், விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது..!! | Ajith Kumar Missed This Blockbuster Movie

காதல் மன்னன், அமர்க்களம் திரைப்படங்களுக்கு பிறகு, கடந்த 2001-ஆம் ஆண்டு அஜித்துடன் இயக்குநர் சரண் இணைந்து பணியாற்றிய திரைப்படம் ஏறுமுகம்.

ரிச்சா பலெட், வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. ஆனால், அதன்பின்னர் அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. பின், விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது..!! | Ajith Kumar Missed This Blockbuster Movie

ஒரு ரவுடி தனது காதலுக்காக திருந்தி வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயரும் ஒரு மனிதனின் வாழ்க்கைதான் ஏறுமுகம் திரைப்படத்தின் மையக்கரு. அஜித்தின் ஏறுமுகம் படம் கைவிடப்பட்ட நிலையில், பின்னர் அதே கதையில் சில மாற்றங்களை செய்த இயக்குநர் சரண், நடிகர் விக்ரமை வைத்து ‘ஜெமினி’ எனும் தலைப்பில் படம் எடுத்தார். இப்படம் 2002-ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. பின், விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது..!! | Ajith Kumar Missed This Blockbuster Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *