Victorian Psycho: திரை விமர்சனம்


மைக்கா மோன்ரோ நடிப்பில் ஸகாரி விகோன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்டோரியன் சைக்கோ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review

கதைக்களம்




1858-யில் வினிஃப்ரெட் நாட்டி என்ற பெண் என்சோர் ஹவுஸ் என்ற அரண்மனைக்கு வேலைக்கு வருகிறார்.


ஆண்ட்ரு, ட்ருசில்லா எனும் சகோதர, சகோதரிக்கு ஆசிரியராக பணியாற்றுவதே வினிஃப்ரெட்டின் வேலை.



அதற்காக அங்கே தங்கும் அவர், ஒருநாள் ஆண்ட்ரூ, ட்ருசில்லாவுடன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.


அங்கே ஒரு மான் இறந்து கிடப்பதுபோல் தெரிய மூவரும் அருகில் செல்கின்றனர். அது உயிருடன் இருக்கிறது என்று ஆண்ட்ரூ கூற, வினிஃப்ரெட் அதனை கொடூரமாக தாக்கிக் கொல்கிறார்.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review

வலியால் துடிப்பவர்களின் உயிரை உடனே எடுத்துவிட வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் எடுக்கிறார் வினிஃப்ரெட்.


இந்த விஷயத்தை ஆண்ட்ரூ தனது தாயிடம் கூற, வினிஃப்ரெட் தனியாக சிறுவனை சந்தித்து எச்சரிக்கிறார்.




இந்த சூழலில் தோட்டக்காரர் வினிஃப்ரெட்டை அவளின் கடந்த காலத்தைக் குறிப்பிட்டு மிரட்ட, அன்றிரவே கோடரியால் அவரை வெட்டிக் கொல்கிறார்.


வினிஃப்ரெட் நாட்டி யார்? அவர் ஏன் அரண்மனைக்கு வந்து இந்த விபரீதங்களை செய்கிறார் என்பதே மீதிக்கதை.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review

படம் பற்றிய அலசல்




The Heart Machine, Sanctuary ஆகிய படங்களை இயக்கிய ஸகாரி விகோன் இயக்கியுள்ள சைக்கோ த்ரில்லர் படம் இது.


விக்டோரியன் சைக்கோ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதன் ஆசிரியரான வெர்ஜினியா ஃபெய்டோ இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.



வினிஃப்ரெட் கதாபாத்திரம் விசித்திரமாக நடந்துகொள்வது, அடுத்து என்ன செய்வாளோ? யாரோ கொல்வாளோ? என பார்வையாளர்கள் பதட்டத்துடனே பார்க்கும் வகையில் இயக்குநர் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


திடீர் திடீரென நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அதிர்ச்சி தரும் ரகம்.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review

வினிஃப்ரெட் கதாபாத்திரம்தான் சைக்கோ என்று பார்த்தால், அரண்மனையில் இருப்பவர்களும் விசித்திரமாகவே நடந்துகொண்டு பயமுறுத்துகின்றனர்.


குறிப்பாக, ஒரு காட்சியில் ட்ருசில்லா வரைந்த மோசமான ஓவியங்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைய, அவளுக்கு தண்டனை தர வேண்டுமென ஜேசன் ஐசாக்ஸ் செய்யும் விஷயம் பரபரப்பு.



மைக்கா மோன்ரோ நடிப்பில் அட்டகாசம் செய்துள்ளார். வினிஃப்ரெட் நாட்டி என்ற கதாபாத்திரத்தை அவர் கையாண்டுள்ள விதம் அருமை.


முகபாணைகளில் வித்தியாசம் காட்டுவது, வசன உச்சரிப்பில் மாறுதல்கள் என பின்னிப் பெடலெடுத்துள்ளார்.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review




மிடுக்கான பௌண்ட்ஸ் எனும் கதாபாத்திரத்தை ஜேசன் ஐசாக்ஸும், அவரது மனைவியாக ரூத் வில்ஸனும் அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


அதேபோல் ஜேகோபி ஜூபே, ஈவி டெம்பிள்டன் மற்றும் தோமஸின் மெக்கென்சி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


படத்தின் நடக்கும் விசித்திரமான, கோரமான சம்பவங்கள்தான் ப்ளஸ்பாயிண்ட்.

யார் என்ன செய்வார்கள், இது எப்படி முடியும் என்று யோசிக்க திடீரென வரும் ட்விஸ்ட் அசத்தல்.


நிக்கோ அகுலரின் ஒளிப்பதிவு, டஸ்டின் சோவ் மற்றும் லான்ஸ் எட்மண்ட்ஸின் படத்தொகுப்பு, ஏரியல் மார்க்சின் இசை என அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

க்ளாப்ஸ்




  • மைக்கா மோன்ரோ



  • திகிலூட்டும் காட்சிகள்



  • கிளைமேக்ஸ் ட்விஸ்ட்




பல்ப்ஸ்




  • அதீத வன்முறை காட்சிகள்




மொத்தத்தில் இந்த விக்டோரியன் சைக்கோ பார்வையாளர்களை பயத்தில் உறைய வைக்கிறாள். சைக்கோ த்ரில்லர் பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

Victorian Psycho: திரை விமர்சனம் | Victorian Psycho Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *