15 நாட்களில் ஜனநாயகன் உலகளவில் செய்துள்ள வசூல்..

ஜனநாயகன் திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
விஜய்யின் ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி தியோல் என பலரும் நடித்துள்ளனர்.
வழக்கமாக விஜய்யின் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடுவார்கள். அதுவும் இது அவருடைய கடைசி படம் அதனால் ஒவ்வொரு திரையரங்கும் திருவிழா கோலமாக மாறியது. லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய கொண்டாட்டமா என அனைவரையும் வியக்க வைத்தது விஜய்யின் ரசிகர்கள் பட்டாளம்.
கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. மேலும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் வசூலில் ஜனநாயகன் திரைப்படம் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் விவரம்
ஜனநாயகன் முதல் நாளிலிருந்தே உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பார்த்து வருகிறோம். எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகத்தான் வசூல் வருகிறது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஜனநாயகன் உலகளவில் ரூ. 302 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






