ஹிந்தி சீரியலில் நடிக்கும் சன் டிவி மருமகள் சீரியல் ஹீரோ ராகுல்… நாயகி இவர்தானா…

மருமகள்
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மருமகள். கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
இப்போது பிரபுவின் தங்கை ரோஹினியின் வாழ்க்கை பிரச்சனையின் கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது.
அவரை அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என பிரபு மற்றும் ஆதிரை போராடி வருகிறார்கள்.
புதிய சீரியல்
இந்த நிலையில் மருமகள் சீரியல் புகழ் ராகுல் ரவி நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலின் சூப்பர் ஜோடி ராகுல் ரவி மற்றும் நித்யா ராம் இருவரும் ஜோடியாக ஹிந்தியில் புதிய சீரியல் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம். ராஜ் நந்தினி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.






