வித்தியாசமான தேர்தலா இருக்கு.. விஜய் பற்றி மறைமுகமாக பேசிய சிம்பு

இன்று வாக்களிக்க வந்த பிரபலங்களிடம் செய்தியாளர்கள் எல்லோரும் விஜய்யை பற்றி தான் கேள்விகள் எழுப்பினார்கள்.
நடிகர் சிம்புவும் வாக்களித்துவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்த தேர்தல் பற்றி கேட்டதற்கு, “எல்லாரும் சென்று வாக்களியுங்கள் என ட்வீட் போடலாம் என நான் நினைத்தேன். ஆனால் இந்த வருஷம் வித்தியாசமான தேர்தலா இருக்கு. எல்லோரும் ஓட்டு போடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். அதுவே ஒரு நல்ல மாற்றம்.”
வெளிப்படையாக பேச முடியாது
“மாற்றம் வரணுமா வேண்டாமா என்பது மக்கள் தீர்ப்பு தான். நான் நடிகனாக மட்டுமே தான் இருக்கிறேன். எனக்கு எல்லா காட்சியிலும் ரசிகர்கள் இருப்பார்கள். நான் ஒருதலைப்பட்சமாக ஒரு விஷயம் சொல்ல முடியாது.”
எல்லாரும் ஓட்டு போடுங்கனு சொல்லலாம்னு நெனச்சேன். ஆனால் இந்த முறை ஓட்டு போட்டே ஆகணும் என மக்கள் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.
விஜய் சாருக்கு உங்க ஆதரவா?
நான் நடிகனாக இருக்கிறேன். ஒருவருக்கு ஆதரவு என வெளிப்படையாக கூற முடியாது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி.






