ஓட் போட வந்தபோது வீடியோ எடுத்த அஜித்… அவர் பயன்படுத்திய போன் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித்
தமிழகத்தில் இன்று தமிழக மக்களுக்கு மிகவும் முக்கியமான நாள்.
நம்மை யார் ஆள வேண்டும், யார் நமக்கு நல்லது செய்வார் என்று யோசித்து மக்கள் ஓட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலை விட இந்த 2026ம் ஆண்டு தேர்தல் ஓட்டுபோடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
காலை முதலே மக்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள்.
அஜித் போன்
எல்லா விஷயத்திலும் மிகவும் சரியாக இருக்கும் நடிகர் அஜித் வழக்கம் போல் தனது ஜனநாயக கடமையை காலையிலேயே செய்து முடித்துவிட்டார்.
வழக்கமாக இல்லாமல் இந்த முறை செம மாஸாக வெள்ளை நிற கோர்ட் அணிந்து வந்து மாஸாக ஓட்டு போட்டுவிட்டு சென்றார். ஆனால் இந்த முறை அஜித் தனது மொபைல் போனில் அங்கிருந்த கூட்டத்தை வீடியோ எடுத்தார்.
அப்போது அவரின் போன் விவரம் வெளியாக அதன் விலை, மாடல் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அஜித் பயன்படுத்திய போன் மாடல் Samsung S 22, இதன் விலை ரூ. 50,000 முதல் ரூ. 80,000 இருக்கும் என கூறப்படுகிறது.






