விஜய்யின் ஜனநாயகன் படத்தின் Deleted Scenes எப்போது வரும்… இயக்குனர் பதில்

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் Deleted Scenes எப்போது வரும்… இயக்குனர் பதில்


ஜனநாயகன்

இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன்.

இத்தனை மாதம் காத்திருத்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகி இருந்தது.

படம் ரிலீஸ் ஆக லேட் ஆனது, தணிக்கை பிரச்சனை, மொத்த படமும் சமூக வலைதளங்களில் லீக் என இந்தப் படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது, ஆனாலும் ரசிகர்கள் எப்போதும் போல விஜய்யின் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

நாளுக்கு நாள் ஜனநாயகன் படமும் வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் Deleted Scenes எப்போது வரும்... இயக்குனர் பதில் | H Vinoth About Jananayagan Deleted Scenes


நீக்கப்பட்ட காட்சி

ஜனநாயகன் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் ரன்னிங் டைம் உடன் வெளியாகி இருந்தது, இதில் சில காட்சிகள் வேறு நீக்கப்பட்டிருந்தது. Deleted செய்யப்பட்ட காட்சிகள் குறித்து ஏற்கெனவே இயக்குனர் எச்.வினோத் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் இரண்டு நகைச்சுவைக் காட்சிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு எமோஷனல் காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கிவிட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த காட்சிகளை வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *