வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. வாழை 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்

வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. வாழை 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்


வாழை 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2025ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் வாழை.

இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் அனைவரையும் உலுக்கியது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

வாழை 2 

இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மாரி செல்வராஜ் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் பரியேறும் பெருமாள் நடிகர் கதிர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும்,  முதல் பாகத்தில் நடித்திருந்த நிகிலா விமல், வாழை 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *