ராஷ்மிகாவுக்கு ஷூட்டிங்கில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி, ஷூட்டிங் நிறுத்தம்

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார்.
அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல படங்களில் அவர் மாறி மாறி நடித்து வருகிறார்.
இடுப்பில் காயம்
ஒரு படத்திற்காக ராஷ்மிகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தபோது அவரது இருப்பில் இருக்கும் தசைநார் கிழிந்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் 6 வார காலத்திற்கு ஓய்வெடுத்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
அதனால் ராஷ்மிகா நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.






