ராக்கா படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்.. முழு விவரம் இதோ

ராக்கா
ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் ராக்கா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளின்போதுதான் இப்படத்தின் First லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ராக்கா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சம்பளம்
இந்த நிலையில், ராக்கா திரைப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹீரோவாக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ரூ. 150 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோன் ரூ. 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்கின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






