மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி ராஜமௌலி பற்றி சொன்ன விஷயம்

மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி ராஜமௌலி பற்றி சொன்ன விஷயம்


RJ பாலாஜி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் குறிப்பிடத்தக்க படங்கள் கொடுத்து வருகிறார். தற்போது அவர் சூர்யா – த்ரிஷா நடித்து இருக்கும் கருப்பு படத்தை இயக்கி இருக்கிறார்.

வரும் மே 14ம் தேதி கருப்பு ரிலீஸ் ஆகும் நிலையில் RJ பாலாஜி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் தனக்கு பாகுபலி பட வாய்ப்பு வந்தது பற்றி பேசி இருக்கிறார் அவர்.

மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி ராஜமௌலி பற்றி சொன்ன விஷயம் | Rj Balaji About Missing Working In Baahubali

பாகுபலி வாய்ப்பு

“பாகுபலி முதல் பாகத்திற்கு மதன் கார்க்கி தமிழில் டைலாக் எழுதி இருந்தார். அவர் என்னை அழைத்து படத்தில் ராணா மகன் ரோலுக்கு உங்கள் குரல் வேண்டும் என ராஜமௌலி கேட்டார் என தெரிவித்தார். உடனே நானும் மகிழ்ச்சி ஆகிவிட்டேன்.”

“ஆனால் இரண்டு நாள் கழித்து போன் செய்து வேண்டாம் என கூறிவிட்டார். உங்கள் குரல் ரொம்ப பிரபலம், இது RJ பாலாஜி குரல் என படம் பார்ப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அது படத்தில் distraction ஆக இருக்கும் என ராஜமௌலி கூறியதாக தெரிவித்தார்.”

“எனக்கு ஏமாற்றமாக இருந்தது, ஆனால் அந்த லாஜிக் சரியான ஒன்று தான்” என RJ பாலாஜி கூறியுள்ளார். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *