பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மீது பாலியல் புகார்! போலீசார் 4 பிரிவில் வழக்கு பதிவு
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ரவிச்சந்திரன். அவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரவிச்சந்திரன் பாஜக-வின் கலை மற்றும் இலக்கிய பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
புகார்
அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுக்க சென்றபோது பெண் தொகுப்பாளரிடம் நாகரீகமற்ற முறையில் ஆபாசமாக பேசி அத்துமீறியதாக தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி அந்த பெண் சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கும் நிலையில், ரவிச்சந்திரன் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
